உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி கழிப்பறை சேதம் மாணர்வர்கள் மீது வழக்கு

பள்ளி கழிப்பறை சேதம் மாணர்வர்கள் மீது வழக்கு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு இலுப்பூர், ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம், அரும்பாக்கம், நாபளூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் பயின்று வருகின்றனர்.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையின் கதவுகள் மற்றும் கழிப்பறையின் உள்ளே உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.இதுவரை, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மாணவர்கள் சேதப்படுத்திய நிலையில், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவர்கள் மீது, உதவி தலைமையாசிரியர் பெர்னாட்ஷா, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி