உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.62 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு

ரூ.62 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு

திருவள்ளூர்:திருவள்ளூர், கபிலர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி அபிராமி, 24. இவர், தன்னை ஏமாற்றியவர்களிடம் இருந்து, 62 லட்சம் ரூபாயை மீட்டு தர வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.அதில் அதன் கூறியிருப்பதாவது:ஒரகடம் பகுதியில் உள்ள 'ஜே.கே.டயர்ஸ்' நிறுவனத்தில், என் கணவருடன் பணிபுரியும் சாலமங்கலத்தைச் சேர்ந்த விக்னேஷ் - சிந்தியா தம்பதி, அவர்களது உறவினர் சங்கீதா ஆகியோர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறினர்.முதலீடு செய்வதாக கூறி, 12 தவணைகளாக என்னிடம் 62 லட்சம் ரூபாய் வரை பெற்றனர். இதில் மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்தனர். எஞ்சிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டனர். மோசடி நபர்களிடம் இருந்து என் பணத்தை மீட்டுத் தரவேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.பணம் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க கடந்த ஜன., 23ல் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஜன., 23ல் அபிராமி புகார் அளித்தார்.அவர்கள் முறையாக விசாரிக்காததால், 'பண மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீசார் முறையாக விசாரிக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மே மாதம் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அபிராமி, நேற்று முன்தினம் மீண்டும் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து போலீசார் விக்னேஷ், சிந்தியா, சங்கீதா ஆகிய மூவர் மீதும் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ