மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்
08-Jan-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம், தமிழக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அதேபோல, ஊரக வளர்ச்சித் துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி அருகே அதன் சங்க தலைவர் மில்கிராஜேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின் அளித்த புகாரையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 230 ஆண் மற்றும் 20 பெண் என, 250 தி.மு.க.,வினர் மற்றும் 58 ஆண், 4 பெண் என, 62 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் என, மொத்தம், 312 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Jan-2025