உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சிசிடிவி கேமரா திருட்டு

 சிசிடிவி கேமரா திருட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சூரிய சக்தியில் இயங்கும் 'சிசிடிவி' கேமராவை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் திருடி சென்றது. கும்மி டிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, பூவலை கிராமத்தில் இறால்களை பதப்படுத்தும் தொழிற்சாலை, சில ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. அங்கு, சூரிய சக்தியில் இயங்கக் கூடிய 'சிசிடிவி' கேமரா, இரண்டு நாட்களுக்கு முன் திருடு போனது. மற்றொரு 'சிசிடிவி' கேமராவில் பார்த்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை