உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிசிடிவி கேமராக்கள் பழுது கடத்தலை தடுப்பதில் சிக்கல்

சிசிடிவி கேமராக்கள் பழுது கடத்தலை தடுப்பதில் சிக்கல்

திருத்தணி;தமிழக - ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஊராட்சிகளில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் பழுதானதால், கஞ்சா, குட்கா, சாராயம் உள்ளிட்டவற்றை கடத்தி வருவோரை தடுக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஊராட்சி, தமிழக - -ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. பூனிமாங்காடு மற்றும் வெங்கடாபுரம் வழியாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் அதிகளவில் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன், திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் போதை பொருட்களை தடுக்கவும், அதை கண்காணிக்கும் வகையில், பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பள்ளி அருகே, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் முறையாக பராமரிக்காததால், பல மாதங்களாக ஒயர்கள் மற்றும் கேமராக்கள் பழுதாகி உள்ளன. இதனால், ஆந்திர மாநிலம் நகரி, ஓஜிகுப்பம் பகுதியில் இருந்து, தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, மாவட்ட எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுத்து, 'சிசிடிவி' கேமராக்களை சீரமைத்து, கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் குட்கா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ