உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிமென்ட் கல் சாலை அமைச்சாச்சு! கால்வாய்க்கு மூடி எப்போது?

சிமென்ட் கல் சாலை அமைச்சாச்சு! கால்வாய்க்கு மூடி எப்போது?

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையின் பின்புற சாலையில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாமல் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன், 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் வாயிலாக, 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிமென்ட் கல் சாலை போடப்பட்டது. ஒவ்வொரு வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற, சாலை நடுவே குழாய் பதிக்கப்பட்டது. சாலை பணி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், 10 இடங்களில் மூடி போடாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் இனியும் மெத்தனமாக இல்லாமல், மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை