உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 6 மாதத்திற்கு பின் சி.இ.ஓ., நியமனம்

6 மாதத்திற்கு பின் சி.இ.ஓ., நியமனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த ரவிச்சந்திரன், கடந்த ஏப்., மாதத்துடன் ஓய்வு பெற்றார். அதன்பின், மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, பொறுப்பு முதன்மை கல்வி அலுவலராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆறு மாதங்களாக, முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்படாத நிலையில், நடப்பாண்டு பள்ளி இறுதி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதில், சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய முதன்மை கல்வி அலுவலராக கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இதற்கு முன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !