மேலும் செய்திகள்
சென்னை - ஆமதாபாத் ரயில் ஒரு மணி நேரம் தாமதம்
14-Dec-2025
சென்னை: தெற்கு ரயில்வேயில் நடக்க உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - மேற்கு வங்க மாநிலம், ஹவுரா உட்பட நான்கு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம், ஹவுரா செல்லும் விரைவு ரயில் வரும் 24ம் தேதி, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில் வரும் 24ம் தேதி செல்லும் வழித்தடத்தில், ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படும். கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து தமிழகம் வழியாக, மேற்கு வங்க மாநிலம், சந்திரகாச்சி செல்லும் விரைவு ரயில், இன்று செல்லும் தடத்தில் மூன்றரை மணி நேரம் தாமதமாக செல்லும். விழுப்புரம் - மேற்கு வங்க மாநிலம், காரக்பூர் செல்லும் விரைவு ரயில், வரும் 23ம் தேதி செல்லும் வழித்தடத்தில், நான்கு மணி நேரம் தாமதமாக செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
14-Dec-2025