மேலும் செய்திகள்
இன்று இனிதாக (04.04.2025) திருவள்ளூர்
04-Apr-2025
திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடந்து வரும் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் எழுந்தருளினார்.பின், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி கொடியசைத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். மாட வீதிகளில் திருவீதியுலா வந்த தேர், பகல் 12:40 மணிக்கு காளியம்மன் கோவில் வளாகத்தில் நின்றது. மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், பா.ம.க.,வைச் சேர்ந்த சவுமியா அன்புமணி, திருவாலங்காடு முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவன் உட்பட 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருமழிசை
திருமழிசை குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வேரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை 9:00 மணிக்கு ஒத்தாண்டேஸ்வரர் சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், 9:30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மதியம் 2:00 மணிக்கு நிலைக்கு வந்தது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளலும், இரவு 8:00 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்கு எழுந்தருளலும் நடந்தது.வரும் 10ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், பகலில் தீர்த்தம் தொட்டி உற்சவமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடைபெறும். வரும் 13ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறுகிறது.
04-Apr-2025