உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீட்டாட்டம்: மூவர் கைது

சீட்டாட்டம்: மூவர் கைது

திருத்தணி:திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செழியன், 33, ராமலிங்கம், 45, ராஜசேகர், 59. இவர்கள் மூவரும், பட்டாபிராமபுரம் கிராமம் அருகே உள்ள தோப்பு பகுதியில், பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூவரையும் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின், விசாரணை முடிந்ததும், மூவரையும் காவல் நிலைய சொந்த ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி