சென்னை எல்லை சாலை பணி விறுவிறு போளிவாக்கத்தில் கட்டடங்கள் அகற்றம்
கடம்பத்துார்:சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, எண்ணூர் துறைமுகம் செல்லும் கனரக வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை எல்லை சாலை திட்டமிடப்பட்டது.எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை, 132.87 கி.மீ., நீளத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதில், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலயில், வெங்கத்துார் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை, 19.70 கி.மீ., துாரத்திற்கு 1,556.54 கோடி ரூபாயில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.நேற்று, போளிவாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை அகற்றும் பணி நடந்தது. 'இழப்பீடு வழங்காதவர்களுக்கு, தொகை வழங்கப்பட்டவுடன் கட்டங்கள் இடிக்கப்படும்' என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.