உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரைகள் கடத்தல் சென்னை வாலிபர்கள் கைது

போதை மாத்திரைகள் கடத்தல் சென்னை வாலிபர்கள் கைது

திருத்தணி:மும்பையில் இருந்து சென்னை வரும் விரைவு ரயிலில், போதை மாத்திரைகள் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த இரு வாலிபர்களை, திருத்தணி ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். மும்பையில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. நேற்று அதிகாலை, மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி விரைவு ரயில் வந்தது. திருத்தணி ரயில் நிலையத்தில் ஏராளமான பயணியர் இறங்கினர். அப்போது, அங்கிருந்த தனிப்படை போலீசார், சந்தேகத்தின்படி இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தனர். அவர்களின் உடைமைகளை சோதித்த போது, 1,300 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சக்திவேல், 26, தினகரன், 25, ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அதேபோல், கடந்த 15ம் தேதி, போதை மாத்திரை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த மூன்று பேரை, திருத்தணி ரயில் நிலையத்தில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி