உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விருது

விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விருது

திருவள்ளூர்:விளையாட்டு வீரர்கள் முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சர்வதேச மற்றும் தேசிய அளவில் ஆண்டுதோறும் பதக்கம் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண், 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்/உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. பரிசாக தலா ஒரு லட்சம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்குகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனை, பயிற்சியாளர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம், வரும் 11க்குள் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ