குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்:குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குழந்தைகள் தின விழா கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. இதில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சேவை துறை சார்பாக பள்ளி, கல்லாரி மாணவ, மாணவியர் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.பின், 'நிமிர்ந்து நில் துணிந்து சொல்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.