மேலும் செய்திகள்
2 வயது குழந்தையை கடித்த தெருநாய்
04-Jul-2025
திருத்தணி:காரில் சிக்கிய 3 வயது குழந்தை, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே, தனியார் ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக, நேற்று திருத்தணியைச் சேர்ந்த நபர், தன் 3 வயது குழந்தையுடன் சொகுசு காரில் வந்தார்.ஹோட்டலுக்கு எதிரே குழந்தையுடன் காரை நிறுத்திவிட்டு, கார் சாவியை எடுக்காமல் உணவு வாங்க சென்றார். காருக்குள் இருந்த குழந்தை விளையாட்டாக கார் சாவியை அழுத்தியதால், கதவுகள் மூடிக் கொண்டன.உணவு வாங்கி விட்டு காரின் கதவை திறக்க முயன்றார். ஆனால், கதவை திறக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், கடப்பாறையால் கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டார்.
04-Jul-2025