மேலும் செய்திகள்
கோயில் வளாகத்தில் 'குடி'மகன்கள் அட்டகாசம்
09-Sep-2025
சோழவரம்:காரனோடையில் போதை ஆசாமிகளால் தொல்லை அதிகரித்து வருவதால், அங்குள்ள 'டாஸ்மாக்' கடையை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவரம் அடுத்த காரனோடை ஜி.என்.டி., சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. இதனருகே, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் 'குடி'மகன்கள் சாலையோரம் குடித்துவிட்டு, அரட்டை மற்றும் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவர்கள், பெற்றோர் அச்சத்திற்கு ஆளாகின்றனர். போதை அதிகமானவர்கள், வங்கி மற்றும் வணிக நிறுவனங்களின் வாயிலில் அரைகுறை ஆடைகளுடன் விழுந்து கிடப்பதால், வாடிக்கையாளர்களும் சிரமப்படுகின்றனர். மேலும், போதை ஆசாமிகள், தள்ளாடியபடி மாநில நெடுஞ்சாலையை கடக்கும்போது, வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறுகின்றனர். இந்த டாஸ்மாக் கடையால், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே, மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Sep-2025