கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை
ஆவடி:திருநின்றவூர், நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 46. இவரது மனைவி விஜயலட்சுமி, 43; தனியார் நிறுவன ஊழியர். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவரது இளைய மகள் சுபஸ்ரீ, 19; தனியார் கல்லுாரி மாணவி. சிறு வயதில் இருந்தே யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும், வீட்டின் முதல் மாடியில் தாத்தா பெருமாள் சாமி உடன் தங்கி இருந்தார்.சுபஸ்ரீ கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவர், மாடியில் உள்ள அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருநின்றவூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.