உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருதரப்பினரிடையே மோதல்: ஐவர் கைது

இருதரப்பினரிடையே மோதல்: ஐவர் கைது

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி பெரிய தெருவை சேர்ந்தவர் தனசேகர், 22. இவர் கூடல்வாடி பட்டரை ஏரி அருகே உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்தார்.அப்போது அதே ஊராட்சி அம்பேத்கர் நகரில் வசிக்கும் மனோகர், 28 சுடுகாடு அருகே மது அருந்தி கொண்டிருந்த நிலையில் தனசேகரனிடம் தகராறு செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த தனசேகர் குடிபோதையில் இருந்த மனோகரனை சரமாரியாக தாக்கியுள்ளார்இதையடுத்து அன்று இரவு 9:15 மணிக்கு தனசேகர் மற்றும் அவரது நண்பரான லோகேஷ் இருவரும் திருவாலங்காடு தேரடி அருகே உள்ள ஓட்டலில் உணவு வாங்க வந்துள்ளனர். ஏற்கனவே மனோகரன் அதே ஓட்டலில் நண்பர்களான மதி, சரண், சுமன், நித்திஷ் ஆகியோருடன் உணவு அருந்திக்கொண்டிருந்தார்.தனசேகரனை கண்டதும் ஆத்திரமடைந்தவர் நண்பர்களுடன் சேர்ந்து உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் இருதரப்பை சேர்ந்த மனோகரன் மற்றும் லோகேஷ் காயமடைந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இரு தரப்பினர் அளித்த புகாரின் படி எட்டு பேர் மீது வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் தனசேகர், வெங்கடேசன், நித்திஷ், சுமன் மற்றும் மதி உள்ளிட்ட ஐவரை கைது செய்தனர். சரணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ