மேலும் செய்திகள்
சுற்றுச்சுவர் இல்லாத கால்நடை மருந்தகம்
20-Mar-2025
வெள்ளியூர்,:திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் உள்ள வெள்ளியூரைச் சுற்றிலும் கீழானுார், மேலானுார், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு, விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அதைச் சார்ந்து ஆடு, மாடு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை தினமும் காலை திறக்கப்பட்டு, கால்நடைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், காலை நேரத்தில் சரிவர திறக்கப்படுவதில்லை. இதனால், கால்நடைகளை அழைத்து வருவோர், மருத்துவர் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.எனவே, கால்நடை மருத்துவமனையை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Mar-2025