உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடிந்து கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி

இடிந்து கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்கு உட்பட்டது கொளத்துார் காலனி. மலை சார்ந்த வயல்வெளியில் அமைந்துள்ள இந்த கிராமத்தினர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.அருகில் உள்ள காடுகள் மற்றும் மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மீண்டும் வீடு திரும்பும் வழியில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் விதமாக, நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப குழாய் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், கால்நடை குடிநீர் தொட்டி முறையான பராமரிப்பு இல்லாததால், இடிந்து கிடக்கிறது. இதனால், தண்ணீர் நிரப்ப முடியாத சூழல் உள்ளது.கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தொட்டியை மீண்டும் சீரமைக்கவும், தண்ணீர் நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை