உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குழந்தைகளின் ஆதார் பதிவு அவசியம் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

குழந்தைகளின் ஆதார் பதிவு அவசியம் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர்:பிறந்த குழந்தை முதல் ௫ வயதிற்கு உட்பட்டோரின் விபரங்களை, சுகாதார நலப்பணிகள் துறை அலுவலகத்தில் பெற்று, ஆதார் பதிவுசெய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டம், அனைத்து துறை அலுவலர்களுடன் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், 0 - 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிறப்பு பதிவு விபரங்களை, மாவட்ட சுகாதார நலப்பணிகள் அலுவலகத்தின் வாயிலாக பெற்று, அக்குழந்தைகளுக்கான ஆதார் பதிவுகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 5 - 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களின் ஆதார் பதிவுகளை பள்ளிக்கல்வி துறை வாயிலாக மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அமைத்து, ஆதார் அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு மேற்கொள்ள வேண்டும்.மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான புதிய ஆதார் பதிவுகள் குறித்த விபரங்களை நேரடியாக விசாரணை செய்து அறிக்கையை தயார் செய்து, 'TN State portal'லில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை