உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில அளவில் முதல் 10 இடங்களை பிடிக்க மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

மாநில அளவில் முதல் 10 இடங்களை பிடிக்க மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர்:'மாநில அளவில் முதல் 10 இடங்களை பெற்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்' என, மணவாள நகர் அரசு பள்ளியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், கலெக்டர் பிரதாப் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.திருவள்ளூர் அடுத்த, கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, கே.ஈ.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளுவர் திருவுருவ சிலை மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் - முகப்புரை நினைவுத் தூண் திறப்பு விழா நடந்தது. திருவள்ளுவர் திருவுருவ சிலை மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் -முகப்புரை நினைவுத்தூணை, விஜிபி குழுமம் முதன்மைத் தலைவர் சந்தோசம் வழங்கினார்.திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், விஜிபி குழும நிறுவனர் சந்தோஷம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் திருவுருவச் சிலையை கலெக்டர் பிரதாப் திறந்து வைத்தார்பின், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:இரண்டு அடி கொண்ட திருக்குறள், அனைத்து கருத்துக்களும் கொண்ட உலக பொதுமறை நூலாகும். அப்படிப்பட்ட திருக்குறள் அனைத்து சமயத்திற்கு ஒன்றுபட்ட நூலாகும். அதேபோல அண்ணல் அம்பேத்கர் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டம் - முகப்புரை திறந்து வைக்கப்பட்டது.அனைத்து மக்களும் ஓட்டளிக்கும் உரிமையை பெற்று தந்தது இந்த அரசியலமைப்பு சட்டம் தான் அனைத்து மக்களும் ஓட்டுளித்து மக்களே தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியை உருவாக்கியது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தான்.பின், மாணவர்களிடம் நீங்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து மாநிலத்தில் முதல் 10 இடங்களை பெற்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து நீங்கள் சமுதாயத்தில் சிறப்பான நிலையினை அடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை