உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புட்லுார், வேப்பம்பட்டு, வெள்ளியூர், மேலகொண்டையார், அரும்பாக்கம், ஒதிக்காடு ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார்.புட்லுார் ஊராட்சியில் 19.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு சுகாதார நிலையம், வேப்பம்பட்டு ஊராட்சி ராகவேந்திரா நகரில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சாலை, மேலகொண்டையார் ஊராட்சியில், தலா 5.07 லட்சம் மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்ட, 16 வெள்ளியூர் பயனாளிகளுக்கு கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார்.வெள்ளியூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார வளாகம் மற்றும் ஆய்வகம், 4.06 கோடி மதிப்பீட்டில் அரும்பாக்கம் -- விளாம்பாக்கம் 3.20 கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட உள்ள சாலையை பணியையும் பார்வையிட்டார்.அப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, வெள்ளியூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை கலெக்டர் ஆய்வு செய்தார். உடன், வட்டார வளர்ச்சி அலுவலர் மெல்கி ராஜசிங், உதவி செயற்பொறியாளர் கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை