உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் உலா கலெக்டர் எச்சரித்தும் நடவடிக்கை இல்லை

தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் உலா கலெக்டர் எச்சரித்தும் நடவடிக்கை இல்லை

ஊத்துக்கோட்டை,;'பாதசாரிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்' என, கலெக்டர் எச்சரித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பது. இதில், கால்நடைகள் வளர்ப்போர், அவற்றை வீடுகளில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப் படுகின்றனர். 'மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்' என, சமீபத்தில் கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், திருவள்ளூர், கடம்பத்துார், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாடுகள், சாலையில் ஜாலியாக உலா வருகின்றன. சில நேரங்களில் மாடுகள் தறிகெட்டு ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை