உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் திருவள்ளூரில் கலெக்டர் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் திருவள்ளூரில் கலெக்டர் ஆலோசனை

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கலெக்டர் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் ஜன.1, 2026ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் உள்ள 35.82 லட்சம் வாக்காளர்களுக்கும், கணக்கெடுப்பு படிவம் அந்தந்த வாக்காளர் வீடுகளில், ஓட்டுச் சாவடி நிலை அலுவலர் மூலமாக, நவ.4 முதல் டிச.,4 வரை கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும். படிவத்தை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் டிச.4ம் தேதிக்குள் வழங்க வேண்டும். வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட படிவத்தை அடிப்படையாக கொண்டு, டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும், டிச.9 முதல் ஜன.8, 2026 வரையிலான காலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான படிவங்கள் பெறப்படும். இச்சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்திலும், 10 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் தேர்தல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை