உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவ - மாணவியருக்கு போட்டி

மாணவ - மாணவியருக்கு போட்டி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி, வரும் 14, 15ம் தேதி நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு, வரும் 14ம் தேதி காலை 9:00 மணியளவில், திருவள்ளூரில் உள்ள டி.ஆர்.பி.சி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டி, வரும் 15ம் திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லுாரி முதல்வர், ஒரு போட்டிக்கு ஒருவர் என கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிக்கு, மூன்று பேர் வீதம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ