உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரி நீரை வெளியேற்றும் மர்ம நபர்கள் மீது புகார்

ஏரி நீரை வெளியேற்றும் மர்ம நபர்கள் மீது புகார்

திருத்தணி; திருத்தணி ஒன்றியத்தில், கிருஷ்ணசமுத்திரம் ஏரி தான் மிகப்பெரியது. இந்த ஏரியை திருத்தணி நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். தற்போது, ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது.இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், ஏரியில் இருக்கும் மீன்களை பிடிப்பதற்காக, இரவு நேரத்தில் கடைவாசல் அருகே மின்மோட்டார்கள் வாயிலாக தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில்படத்துடன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள்சம்பவ இடத்திற்கு சென்று, மின்மோட்டார்கள் மற்றும்குழாய்களை அகற்றி, அப்பகுதிவாசிகளிடம் ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் மர்ம நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து வந்தனர்.இருப்பினும், மீண்டும்மர்மநபர்கள், அதே பகுதியில் மின்மோட்டார் வாயிலாக தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இதுகுறித்தும் நம்நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, திருத்தணி நீர் வளத்துறை உதவி பொறியாளர் சுந்தரம், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில், 'கிருஷ்ணசமுத்திரம் ஏரியில் திருட்டுத் தனமாக தண்ணீரை வெளியேற்றும் மர்ம நபர்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை