புகார் பெட்டி...
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம், சாஸ்திரி தெருவில், கிளை நுாலகம் எதிரில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. நாள்முழுதும் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. வெளிக்கழிவுகள் உடைப்பு வழியாக குடிநீருடன் கலப்பதால் சுகாதார பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனால், குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவர்கள் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்திட மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம். குமரகுருபரன், பொன்னேரி.கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் திருத்தணி ஒன்றியம் தாடூர் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் செல்வதற்காக தெருக்களில் புதியதாக கால்வாய் கட்டப்பட்டுள்ளன. ஆனால் கழிவுநீர் வெளியே செல்வதற்கு வசதி ஏற்படுத்தாததால் கால்வாயில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயில் கொசுக்கள் அதிகளவில் உருவாகி பகல் நேரத்திலேயே கடிக்கிறது. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனினும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- இ. அந்தோணி, தாடூர் காலனி.தொழுதாவூரில்பழுதான ரேஷன் கட்டடம் திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மருதவல்லிபுரம் கிராமம். இங்கு, 200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் ரேஷன் கட்டடம் கடந்த 2020ம் ஆண்டு திருவள்ளூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 7 லட்சத்து, 40,000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.நான்காண்டுகள் மட்டும் ஆன நிலையில் ரேஷன் கட்டடத்தின் தரை பகுதி முழுதும் சேதமடைந்து பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.- உ. பிரவீன், தொழுதாவூர்.கோவில் அருகே மருத்துவக்கழிவுகள் திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவில் அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், கருவூவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்மற்றும் தாசில்தார் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் திரவுபதியம்மன் கோவில் எதிரே மற்றும் அரசு அலுவலகங்கள் அருகே, மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலான மருத்துவ கழிவுகள் தீயில் எரியாமல் உள்ளன.நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில் மற்றும் கையுறைகள் போன்ற கழிவுகள் கொட்டியுள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக மருத்துவ கழிவுகளை அகற்றி, மருத்துவ கழிவுகள் கொட்டிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - கே. நரசிம்மன், திருத்தணி.மின்கம்பத்தை சுற்றி படர்ந்துள்ள கொடிபூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் அடர்ந்து வளர்ந்தள்ளன. இதனால் அவசர காலத்தில் மின்கம்பத்தின் மீது ஏறி பழுது பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மாம்பாக்கம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மின்கம்பத்தை சுற்றியுள்ள கொடிகளை அகற்ற வேண்டும்.- வி.ராமு, மாம்பாக்கம்.