உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

பழுதடைந்த குடிநீர் தொட்டி இடிக்கப்படுமா?திருத்தணி -- பொதட்டூர்பேட்டை செல்லும் முதன்மை மாநில நெடுஞ்சாலை, சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட பொம்மராஜுபுரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பொம்மராஜுபுரம், இஸ்லாம் நகர் செல்லும் சாலையோரம் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டி, பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது.மேலும் தொட்டியின் மேற்பகுதி மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.இதுவரை குடிநீர் தொட்டி இடித்து அகற்றாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்.- -எஸ். வெங்கடேசன், பொம்மராஜிபுரம்.திருத்தணி மலைப்படிகளில்விளக்கு இல்லாமல் இருள்திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக நடந்து செல்வதற்கு சரவணபொய்கை திருக்குளம் மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய இரு வழியாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், மேல்திருத்தணியில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் படிகளில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், மாலை 6:00 மணிக்கு மேல் படிகள் வழியாக செல்லும் பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.மேலும், இரவு 8:45 மணிக்கு கோவில் நடையை சாத்தியபின் ஊழியர்களும் மலைப்படிகள் வழியாக மேல்திருத்தணிக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.எனவே மலைப்படிகளில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.- -கே.கமலக்கண்ணன், மேல்திருத்தணி.புதர் மண்டியுள்ளபயணியர் நிழற்குடைதிருத்தணி--- -- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், வேணுகோபாலபுரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. பயணியர் வசதிக்காக அங்கு நிழற்குடை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் பராமரிப்பின்றி நிழற்குடை உள்ளதால் பயணியர் அங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும், நிழற்குடை சுற்றியும் செடிகள் வளர்ந்து உள்ளதால் பயணியர் அங்கு செல்லாமல் சாலையோரம் பேருந்து வரும் வரை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் காத்திருக்கின்றனர்.செடிகள் மத்தியில் நிழற்குடை உள்ளதால், அங்கு சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன.எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றியும், நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.- --வி.பெருமாள், வேணுகோபாலபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி