புகார் பெட்டி மீடியனில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?
மீடியனில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?ஊத்துக்கோட்டை -- பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், சூளைமேனி, தண்டலம் ஆகிய இடங்களில் சாலை தடுப்பு - மீடியன் உள்ளது. இதில் இரண்டு பக்கமும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் மீது உரசுவதால் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக மீடியனில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.- -எஸ்.பிரசாத், தண்டலம்.கழிவுநீர் சூழ்ந்த குடிநீர் குழாய்திருமழிசை பேரூராட்சியில் 13வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது பிராயம்பத்து. இங்குள்ள பஜனை கோவில் தெருவில் குடியிருப்பு பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், குடிநீர் குழாயை கழிவுநீர் சூழ்ந்து உள்ளது. குழாயில் அடைப்பு இல்லாததால் கம்பை வைத்து அடைத்துள்ளதால் குடிநீர் வீணாகி அப்பகுதியில் சேகரமாகியுள்ள கழிவுநீரில் கலந்து குளம் போல் நிற்கிறது. இது குடிநீர் பிடிக்க வரும் பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதோடு தொற்று நோய் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட் பேரூராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயை சூழ்நதுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மாரியப்பன், திருமழிசை.மின் ஒயர்களில் சூழ்ந்துள்ள கொடிபொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் துணை மின்நிலையம் அமைந்து உள்ளது. மின்நிலையத்திற்கு உயர் அழுத்த மின்சாரம் வரும் மின்பாதையில் இருக்கும் மின்கம்பங்கள், ஒயர்களில் கொடிகள் படர்ந்து கிடக்கின்றன.துணை மின்நிலைய வளாகத்தில் இருக்கும் இப்பகுதி புதர் மண்டி கிடப்பதால் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படும். துணை மின்நிலைய வளாகத்தில் மின்ஒயர்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்றி பராமரிக்க வேண்டும்.- ரா. கிருஷ்ணன், பொன்னேரி.