உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

டிரான்ஸ்பார்மர் அகற்றுங்கள்திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி ஊராட்சியில் இ -- சேவை மையம் எதிரே அமைந்துள்ளது டிரான்ஸ்பார்மர்.இங்கு பழைய டிரான்ஸ்பார்மர் பழுது அடைந்த காரணத்தால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய டிரான்ஸ்பார்மர் அகற்றப்படவில்லை. தற்போது பழைய டிரான்ஸ்பார்மரின் மின்கம்பங்கள் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. விழுந்தால் அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது எனவே, அதை அகற்ற வேண்டும்.- ம. உதயராஜ், சின்னமண்டலி.ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும்கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை பகுதியில், முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர், ஸ்ரீராம் கார்டன், சபரி கார்டன் என 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அங்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டும் என்றால், இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. மேற்கண்ட குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, மைய பகுதியான பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில், ஏதேனும் ஒரு வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்.-ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.சேதமடைந்த நிழற்குடைசீரமைக்க வேண்டும்திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மக்கள் திருத்தணி மற்றும் குருவராஜபேட்டை மார்க்கத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பயணியர் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்தது. ஆனால் பராமரிக்காததால் தற்போது நிழற்குடை உள்பகுதியில் சேதம் அடைந்துள்ளது. மேலும், நிழற்குடையில் குடிமகன்கள் மதுக்கூடமாக பயன்படுத்தி வருவதால் பயணியர் வெயில் மற்றும் மழைக்கு கூட ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சேதமடைந்த நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.- - -எஸ்.சுப்ரமணியம், கார்த்திகேயபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை