செடி, கொடிகள் சூழ்ந்த வி.ஏ.ஓ., அலுவலகம்
திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராம வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, சாதி, இருப்பிடம், பட்டா மாறுதல், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை பெற, மக்கள் வந்து செல்கின்றனர். சில மாதங்களாக, அலுவலக வளாகத்தை சரிவர பராமரிப்பதில்லை. இதனால் செடி, கொடிகள் சூழ்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுத்து, வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தை சீரமைக்க வேண்டும். - ராஜாராம், காவேரிராஜபுரம்.