உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுடுகாடில் மணல் திருட்டு சப்- கலெக்டரிடம் புகார்

சுடுகாடில் மணல் திருட்டு சப்- கலெக்டரிடம் புகார்

பழவேற்காடு:பழவேற்காடு மீனவப்பகுதியில் உள்ள கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட சுடுகாடு பகுதியில் கடந்த சில தினங்களாக மணல் திருட்டு நடக்கிறது.இது குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து உள்ளனர்.புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த, 22ம் தேதி, ஆண்டிகுப்பத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரது இறுதி சடங்கிற்கு இரு கிராமத்தினரை சேர்ந்தவர்களும் சுடுகாடு பகுதிக்கு சென்றபோது, அங்கு மணல் திருடப்பட்டிருப்பதை கண்டோம்.மேலும், அரிச்சந்திரன் மேடையும் தகர்க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றோம். சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்டதுடன், அரிச்சந்திரன் மேடையையும் தகர்த்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. புகாரை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !