உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பகலில் ஒளிரும் மின்விளக்கு வரிப்பணம் வீணாவதாக புகார்

பகலில் ஒளிரும் மின்விளக்கு வரிப்பணம் வீணாவதாக புகார்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது போளிவாக்கம் ஊராட்சி. இங்கிருந்து, இலுப்பூர் வழியாக பாப்பரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள கம்பங்களில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள், பகல் நேரத்திலும் தொடர்ந்து ஒளிர்கின்றன.இதனால் மின்சாரம் வீணாவதோடு, மக்களின் வரிப்பணமும் வீணாகி வருவதாக, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, பகல் நேரங்களில் மின்விளக்குகள் ஒளிர்வதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி