உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பத்துடன் கான்கிரீட் சாலை தொழுதாவூர் ஊராட்சி அலட்சியம்

மின்கம்பத்துடன் கான்கிரீட் சாலை தொழுதாவூர் ஊராட்சி அலட்சியம்

திருவாலங்காடு:தொழுதாவூரில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தையும் இணைத்து, கான்கிரீட் சாலை அமைத்த ஊராட்சி நிர்வாகம் மீது அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது , ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி. இங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருந்தது. இதை, ஊராட்சி நிர்வாகம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில், 2025 - ---26ம் ஆண்டுக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 6 லட்சத்து 67,000 ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ந டந்து வருகிறது. மின்வாரியம் சார்பில், இச்சாலையில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பத்தையும் சேர்த்து, கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்கம்பத்துடன் இணைத்து, சாலையிலே திட்டம் குறித்த பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ