உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எண்ணுாரில் கன்டெய்னர் பெட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து

எண்ணுாரில் கன்டெய்னர் பெட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து

எண்ணுார்:லாரியில் இருந்து கன்டெய்னர் பெட்டி, எண்ணுார் விரைவு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ராணிப்பேட்டையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை, சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அதிகாலை, எண்ணுார் - ராமகிருஷ்ணா நகர் சந்திப்பில், எண்ணுார் விரைவு சாலையில் திரும்பும்போது, கன்டெய்னர் பெட்டி மட்டும் தனியே கழன்று, பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. சாலையோரமாக விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. லாரியை ஓட்டி வந்த திருவாரூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அசோக்குமார், 43, என்பவரும், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.பின், நேற்று காலை, ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, சாலையோரம் கிடந்த கன்டெய்னர் பெட்டி மீட்கப்பட்டு, லாரியில் பொருத்தி எடுத்து செல்லப்பட்டது.மற்றொரு சம்பவம்சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் ஆண்டார் குப்பம் - சரக்கு பெட்டக முனையத்திற்கு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த விக்னேஷ், 26, என்பவர் ஓட்டிச் சென்றார்.எர்ணாவூர் மேம்பால இறக்கம், முல்லை நகர் சந்திப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காமல், தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, எதிரே வந்த ஈச்சர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கன்டெய்னர் லாரியின் இடப்பக்கம் முழுதும் அப்பளம் போல் நொறுங்கியது. ஓட்டுநர் காயமின்றி தப்பினார். ஈச்சர் வாகனம் பாதிப்பின்றி தப்பியது.இரு சம்பவங்கள் குறித்தும், எண்ணுார் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை