உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிற்சாலையை முற்றுகையிட்ட ஒப்பந்ததாரர்கள்

தொழிற்சாலையை முற்றுகையிட்ட ஒப்பந்ததாரர்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே, பாத்தப்பாளையம் கிராமத்தில், தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று காலை, அந்த தொழிற்சாலையின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், 36 பேர் தொழிற்சாலை நுழைவாயில் முன் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், சமாதானம் பேசினர். ஒப்பந்தாரர்களுக்கு, தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தர வேண்டிய, 45 லட்சம் ரூபாய் தொகை பல மாதங்களாக நிலுவையில் உள்ளது.இதனால், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல முறை கேட்டும் தொழிற்சாலை நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் அடைந்தனர். ஒப்பந்நதாரர்கள் சார்பில் சிலரையும், தொழிற்சாலை நிர்வாகத்தையும் அழைத்து, தாசில்தார் தலைமையில் நேற்று பேச்சு நடத்தப்பட்டது.தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் வாயிலாக சுமூக தீர்வு காணப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதன் பேரில் பேச்சு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ