உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் இணைப்பை துண்டித்து செப்பு தகடுகள் திருட்டு

மின் இணைப்பை துண்டித்து செப்பு தகடுகள் திருட்டு

திருவள்ளூர்;மின்மாற்றியை உடைத்து செப்பு தகடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். திருவள்ளூர் அடுத்த குன்னவலம் கிராமத்தில், மின்வாரியம் சார்பில் 25 வாட் கொண்ட மூன்று மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, குன்னவலம் ஆலமரம் அருகே இருந்த ஒரு மின்மாற்றியில், மின் இணைப்பை துண்டித்த மர்மநபர்கள், அதிலிருந்த செப்பு தகடுகளை திருடிச் சென்றனர். தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், மாற்று மின்மாற்றி அமைத்தனர். இதுகுறித்து, ராமன்சேரி மின் வாரிய உதவி பொறியாளர் இன்பரசன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். மே லும், மின்மாற்றியில் 3.60 லட்சம் ரூபாயில் மதிப்பிலான செப்புத்தகடுகளும், 25,000 ரூபாய் மதிப்புள்ள ஆயிலும் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை