மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
01-Aug-2025
திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் அருகே, ஸ்கூட்டரில் லாரி மோதிய விபத்தில், தம்பதி படுகாயம் அடைந்தனர். திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 43. இவரது மனைவி கனகா, 38. தம்பதி நேற்று முன்தினம் மாலை, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில், கனகம்மாசத்திரம் அருகே உள்ள வி.ஜி.கே.புரத்திற்குச் சென்றனர். அப்போது, கனகம்மாசத்திரம் நான்கு முனை சந்திப்பு அருகே வந்த போது, ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற லாரி, இவர்களது ஸ்கூட்டரில் மோதியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Aug-2025