உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டு வாசலில் மண் கொட்டுவதில் கோஷ்டி மோதல்: தம்பதி படுகாயம்

வீட்டு வாசலில் மண் கொட்டுவதில் கோஷ்டி மோதல்: தம்பதி படுகாயம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹீம் மனைவி சயனா, 33. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காதர் மனைவி சான்பீ, 48, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் சயனா வீடு கட்டுமான பணிகளுக்காக, வீட்டு வாசலில் ஜல்லி, மண் கொட்டி வைத்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சான்பீவுக்கும், சயனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பைச் சேர்ந்த மொத்தம், 18 பேர் உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், இப்ராஹீம், சயனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, இரு தரப்பினர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார், இப்ராஹீம், அப்துல்லா, அக்பர், முகமதுகவுஸ், காதர், மும்தாஜ் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை