மேலும் செய்திகள்
சாலையில் திரிந்த நாயால் விபத்து; தம்பதி படுகாயம்
28-Dec-2024
செவ்வாப்பேட்டை:திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ், 45. இவரது மனைவி சாமுண்டீஸ்வரி, 42. இருவரும் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, சாமுண்டீஸ்வரி வீட்டில் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த புடவையில் தீ பிடித்தது. இவரது அலறலை கேட்ட கணவர் தீயை அணைக்கும் போது இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.படுகாயமடைந்த இருவரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Dec-2024