உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சார ரயில் சிக்கி பசு மாடு உயிரிழப்பு

மின்சார ரயில் சிக்கி பசு மாடு உயிரிழப்பு

திருவள்ளூர்:அரக்கோணத்தில் இருந்து, நேற்று முன்தினம், இரவு 9:00 மணிளவில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி மின்சார புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் திரளான பயணியர் பயணித்தனர்.திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு, இரவு 9.20 மணியளவில் வந்தபோது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பசுமாடு ஒன்று மின்சார ரயில் சிக்கி உயிரிழந்தது.இதைக் கண்ட ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் போராடி மின்சார ரயிலில் சிக்கிய பசுமாட்டின் உடலை அப்புறப்படுத்தினர்.இதையடுத்து, அந்த மின்சார புறநகர் ரயில், ஒரு மணி நேரம் காலதாமதமாக, இரவு 10.20 மணி அளவில் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது.இதனால், அந்த ரயிலில் பயணம் செய்த பயணியர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி