மின்னல் தாக்கி பசுமாடு பலி
திருத்தணி:திருத்தணி அருகே வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, மின்னல் தாக்கி உயிரிழந்தது. திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் ஊராட்சி, மேல்எட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 55. இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான பசு மாட்டை, அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த திருத்தணி வருவாய் துறையினர், அரசு சார்பில் நிவாரண நிதி பெற்று தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.