உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ஏரிகளின் உபரி நீர் கால்வாயை ஒட்டியுள்ள பயிர் நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ரெட்டம்பேடு, குருவிஅகரம், அயநல்லுார், ஆகிய கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட நெற்பயிர்கள், மழைவெள்ளத்தில் மூழ்கின. மேலும், பன்பாக்கம், கிளிக்கோடி ஆகிய கிராமங்களில், 50 ஏக்கர் பயிர் நிலங்கள் மழை வெள்ளத்தில் முழ்கின. கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நீர்வளத்துறையினரிடம் முறையிட்டு, உபிரி நீர் கால்வாயில் தண்ணீர் வடிந்து செல்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது பயிர் நிலங்களில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை