உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரக்கோணம் நெடுஞ்சாலை சேதம் வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்

அரக்கோணம் நெடுஞ்சாலை சேதம் வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்

கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்ற. இங்கிருந்து, மப்பேடு வழியாக தண்டலம் செல்லும் நெடுஞ்சாலையில் சிறுபாலம் அருகே சாலை சேதமடைந்தது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதையடுத்து, இப்பகுதிவாசிகள் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கற்கள் மற்றும் கம்பு நட்டு, அதில் சிகப்பு நிற துணியை கட்டி, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், எதிர்பாராத விதமாக சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !