திருத்தணி நகராட்சியில் சாலைகள் சேதம்
திருத்தணி நகராட்சியில் சாலைகள் சேதம்திருத்தணி திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்காக, கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் 110 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டது. ஆனால், இன்றுவரை நகராட்சியில் முறையாக குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் குடிநீர் குழாய் களும் புதைக்கப்பட்டிருக்கும் பல இடங்களில் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பலமுறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும், எவ்வித நடவடிக்கை இல்லை. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்து, 6 மாதங்களுக்கு மேலாகியும், குடியிருப்புகளுக்கு தண்ணீர் சென்றடைவில்லை. மாறாக சாலை மற்றும் தெருக்களில் போடப்பட்டுள்ள குழாய்களில் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன. ஏற்கனவே குடிநீர் குழாய்கள் புதைப்பதற்கு தோண்டிய பள்ளங்களை முறையாக மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது வெளியேறும் தண்ணீரால் மேலும் சாலைகள் சேதம் அடைவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே கலெக்டர் மேற்கண்ட மூன்று துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டம் நடத்தி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.