உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடம்பத்துாரில் சேதமான பாலம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடம்பத்துாரில் சேதமான பாலம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடம்பத்துார், கடம்பத்துாரில் இருந்து அதிகத்துார் வழியாக மணவாளநகர் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி கடம்பத்துார், வெண்மனம்புதுார், புதுமாவிலங்கை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் மேல்நல்லாத்துார் சென்று திருவள்ளூர், காஞ்சிபுரம் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் கடம்பத்துார் ஏரியிலிருந்து வெளியேறும் கலங்கல் நீர் செல்லும் தரைப்பாலம் உள்ளது.இந்த தரைப்பாலம் ஜனவரியில் பெய்த மழையில் சேதமடைந்ததால் வாகனங்களில் சென்று வருவோர் சிரமப்படுகின்றனர்.இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். தரைப்பாலம் சேதமடைந்து மூன்று மாதங்கள் ஆகியும் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாதது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ