மேலும் செய்திகள்
மோவூர் காலனி சுடுகாட்டு பாதை சேதம்
12-Jan-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே உள்ள மோவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நுாலக கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளதால், வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மோவூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில், மோவூர் கிராமம், காலனி மற்றும் மோவூர் கண்டிகை ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இக்கிராமவாசிகளுக்காக மோவூர் கிராமத்தில் நுாலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நுாலக கட்டடம் கட்டி பல ஆண்டுகளான நிலையில், தற்போது பராமரிப்பின்றி உள்ளது.நுாலகத்தின் கூரையில் செடிகள் வளர்ந்தும், நுழைவு வாயில் மற்றும் படிக்கட்டு சேதமடைந்தும் உள்ளது.இதனால், இந்த நுாலகத்திற்கு வருவோர், கடும் அச்சத்துடன் உள்ளனர். மேலும், மழை காலத்தில் மழைநீர் உட்புகுந்து விடுவதால், புத்தகம் நனைந்து விடுவதாக வாசகர்கள் தெரிவித்தனர்.எனவே, ஒன்றிய நிர்வாகம் நுாலகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என, வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
12-Jan-2025