மேலும் செய்திகள்
பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
08-Jan-2025
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டையில், அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சொரக்காய்பேட்டை, மேலப்பூடி, பெருமாநல்லுார், கீழப்பூடி, ஸ்ரீகாவேரிராஜபேட்டை, நெடியம், கொளத்துார், ஈடிகாபேட்டை, வெங்கல்ராஜகுப்பம், பாண்டரவேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 450 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் வடக்கில் கொசஸ்தைலை ஆறு பாய்கிறது. கடந்த 2021ல் பெய்த கனமழையின் போது கொசஸ்தலை ஆறின் வெள்ளம் பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்தது. இதில், மூன்றடுக்கு பள்ளி கட்டடத்தின் அடித்தளம் பாதிக்கப்பட்டது. வகுப்பறையில், 100 சதுர அடி பரப்பில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த வெள்ளம், பள்ளியின் வடகிழக்கு திசையில் சுற்றுச்சுவரை உடைத்து வெளியேறியது. இதில், சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த ஆலமரம் வெட்டி அகற்றப்பட்டது. ஆனால், சுற்றுச்சுவர் இதுவரை சீரமைகக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி, சுற்றுச்சுவரை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
08-Jan-2025