பெண்ணுக்கு கொலை மிரட்டல்
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புங்கத்துார் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி சீதா, 39. இவருக்கும், கணவரின் சகோதரரான பாரதிதாசன் என்பவருக்கும், இரு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.கடந்த 10ம் தேதி அத்துமீறி நுழைந்த பாரதிதாசன், சீதா மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் ஆபாசமாக பேசினார். மேலும், சீதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சீதா அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.